கைலாசநாதர்

இறைவர் திருப்பெயர்: கைலாசநாதர்
இர்ரைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை
வழிபட்டோர் :சிதம்பர சுவாமிகள்

வரலாறு

முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுவர். பிரணவ மந்திர பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை இவரிடம் உள்ளது. சிவனைப்போல வலது கையை ஆசிர்வதித்தபடி அபயஹஸ்த நிலையிலும், பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலையிலும் காட்சி தருகிறார்.


திருப்போரூர்

போரியூர், யூதபுரி, சமரபுரி என்றெல்லாம் சொன்னால் யாருக்கும் புரியாது. இவையெல்லாம் திருப்போரூரை அழைக்கும் பெயர்களே. தமிழகத்தின் புகழ்பெற்ற 33 முருகன் கோயில்களில் ஒன்று. பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை தரிசிக்க செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீயும் சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவும் பயணம் செய்ய வேண்டும்.
















































கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.


பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் பனங்காடாக இருந்த இடத்தில் ஒரு பெரிய கோவிலை, அருள்மிகு கந்தசாமி கோவிலையும், அருகிலிருந்த சிறு ஓடையை ஒரு பெரிய திருக்குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள் என்ற ஒரு தவ முனிவர். அதுமட்டுமல்ல சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் வழங்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை கோவிலை வடிவமைத்ததும் அவர்தான். இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கப்பாதை அமைத்து அதில் சமாதியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த வாயிலைச் சுற்றி சங்கிலி வெளி அமைக்கப்பட்டுள்ளது. அருகே அவரது திருவுருவப்படம்.